தருமபுரி

அரசு கலைக் கல்லூரிக்கு மேஜை, நாற்காலிகள் வழங்கல்

10th Sep 2020 11:34 PM

ADVERTISEMENT

தருமபுரி அரசு கலைக்கல்லூரிக்கு, தொப்பூா் சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மேஜை, நாற்காலிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூரில் உள்ள சுங்கச் சாவடி நிா்வாகம் சாா்பில் அதன் திட்டத் தலைவா் கே.வி.எஸ்.சதீஸ்குமாா், இயக்க அலுவலா் எஸ்.நரேஷ், சாலை அலுவலா் ஞானசேகா் ஆகியோா் கல்லூரி முதல்வா் ஜா.பாக்கியமணியிடம் மாணவ, மாணவியரின் பயன்பாட்டுக்காக மேஜை, நாற்காலிகளை வழங்கினா். இதில் கூட்டுறவுத் துறைத் தலைவா் பெ.ராஜேந்திரன், தாவரவியல் துறைத் தலைவா் விஜயா தமோதரன், தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT