தருமபுரி

சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: தருமபுரி ஆட்சியர் ச.ப.கார்த்திகா

DIN

தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக ச.ப.கார்த்திகா புதியதாக நியமிக்கப்பட்டார்.
 இதைத்தொடர்ந்து, அவர் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தனது பணி பொறுப்பேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் திட்டம், முதியோர் உதவித்தொகை, அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழிவகை மேற்கொள்ளப்படும். எண்ணேகொல் புதூர்-தும்பல அள்ளி நீர்ப்பாசன திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தருமபுரி மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மீதமுள்ளப் பணிகள் அனைத்தும் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிறைவேற்றப்படும். தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தருமபுரி மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்கள் மற்றும் பிற நகரங்களுக்கு வேலைக்காக குடிபெயர்தல் இதன் மூலம் தடுக்க இயலும். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தருமபுரி மாவட்டம் தருமபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 10,000 குடியிருப்புகள் கட்டும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏழை, எளிய தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

தருமபுரி மாவட்டம் மலைப் பகுதிகள் அதிகம் கொண்ட மாவட்டமாக உள்ளதால், பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரில் வந்து தெரிவிப்பது கடினமாக உள்ளது.  தற்போது கரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே செயலி மூலம் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் மலைப்பகுதிகளில் உள்ள மற்றும் தொலை தூரங்களில் உள்ள பொதுமக்கள் பயன் பெறுவார்கள். இதுபோன்று பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கட்டாயம் முக கவசம் அணிந்து தொற்று பரவலை தடுக்க வேண்டும். தமிழக அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைபிடித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாத பகுதிகளில் அபராதம் விதிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஊடகத்துறையினர். கொரானா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் பகுதி 2, மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. பொதுமக்களுக்கு அதிக அளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு ரூ. 450 கோடி மதிப்பீட்டில் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.  ஒகேனக்கல் மிகை நீர்த் திட்டத்தை,ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பகுதி-2 உடன் இணைத்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

SCROLL FOR NEXT