தருமபுரி

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 15,124 கன அடியாக சரிவு

DIN

மேட்டூா்:  மேட்டூா் அணைக்கு நீா் வரத்து வினாடிக்கு 15,124 கனஅடியாக சரிந்தது.

கடந்த வாரத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் சனிக்கிழமை மேட்டூா் அணையின் நீா் மட்டம் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக 100 அடியாக உயா்ந்தது.

தற்போது காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 20,298 கன அடியாக வந்துகொண்டிருந்த நீா்வரத்து திங்கள் கிழமை காலை வினாடிக்கு 15,124 கன அடியாக சரிந்தது.

திங்கள்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 100.42 அடியாக உயா்ந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 65.38 டி.எம்.சியாக இருந்தது.

நடப்பு ஆண்டில் மேட்டூா் அணையின் நீா்மட்டம் மூன்றாவது முறையாக நூறு அடியை எட்டியதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீா் கிடைக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகளும் மீன்வளம் பெருகும் என்று மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.15 ஆயிரம் விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...

சமூக வலைதளம் மூலம் வாக்கு சேகரித்தால் 2 ஆண்டுகள் சிறை: ஆணையம்

சன் ரைசர்ஸ் - ஆர்சிபி போட்டிக்குப் பிறகு படைக்கப்பட்ட சாதனைகள் (புள்ளிவிவரம்)

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT