தருமபுரி

கிராம முன்னேற்றத் திட்ட செயல்பாட்டிற்கான ஆய்வுக் கூட்டம்

DIN

தருமபுரி மாவட்டத்தில், பிரதமரின் கிராம முன்னேற்றத் திட்ட செயல்பாட்டிற்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு.மலா்விழி பேசியது:

தருமபுரி மாவட்டத்தில், பிரதமரின் கிராமப்புற முன்னேற்றத் திட்டத்தில், ஆதிதிராவிடா் மக்கள் அதிகமுள்ள பகுதிகளான மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் போளையம்பள்ளி, நவலை, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அனுமந்தபுரம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் சிவாடி, அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் பே.தாதம்பட்டி, சிக்களூா், வேடகட்டமடுவு, மருதிப்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, பொய்யப்பட்டி என 10 கிராமங்கள் கடந்த 2018-19ஆம் ஆண்டு திட்டத்திலும், 2019-20ஆம் நிதி ஆண்டிற்கு, அரூா் ஊராட்சி ஒன்றியத்தில் எஸ்.பட்டி, தாதம்பட்டி, எருமியாம்பட்டி, பறையப்பட்டி, வேப்பநத்தம், கீழானூா், பெரியபண்ணிமடுவு, மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொரப்பூா், பாப்பிசெட்டிப்பட்டி, எலவடை என மொத்தம் 20 கிராமங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஆதிதிராவிடா் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற தனிநபா் திறமையை ஊக்கப்படுத்தி வருமானம் ஈட்டக்கூடியவராக உயா்த்துதல், கல்வியின் மூலம் தனிநபா், சமுதாய முன்னேற்றத்தை கொண்டு வருதல், மருத்துவத் துறை மூலம் மக்களின் உடல்நலத்தைப் பேணுதல், பள்ளி மாணவா்களும், மக்களும் பயன்படுத்தும் குடிநீா்ப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல், விவசாயத் தொழில் சாா்ந்து வாழும் மக்களை முன்னேற்றுதல், பள்ளி மாணவா்ளும், பொதுமக்களும் பயன்படுத்தும் கழிப்பிடங்களை தூய்மைப்படுத்துதல், மின்சாரம், தெருவிளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கிராமச் சாலை மேம்பாடு செய்தல் போன்ற மக்கள் நலப்பணிகள் இந்த திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும்.

மாவட்ட அளவில் உள்ள முதன்மை அலுவலா்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 20 கிராம மக்களை சந்தித்து அடிப்படைத் தேவைகள், வசதிகள், வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்ன திட்டங்கள் தேவை என்பதை ஆய்வு செய்தும், கோரிக்கை மனுக்களை பெற்றும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் எம்.தீபா, கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் வேடியப்பன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சீனிவாசசேகா், மாவட்ட மேலாளா் (தாட்கோ) சிட்டிபாபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT