தருமபுரி

ஒகேனக்கல் மலைப்பாதையில் ராட்சதப் பாறை: முன்னெச்சரிக்கையாக அகற்றம்

DIN

ஒகேனக்கல் மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த ராட்சதப் பாறையை பென்னாகரம் நெடுஞ்சாலை துறையினா்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக பென்னாகரம் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அவ்வப்போது ஒகேனக்கல் கணவாய் பகுதியில் உள்ளத சாலையில் சிறிய அளவிலான பாறைகளும், கற்களும் மண் அரிப்பின் காரணமாகவும், மழைநீரால் அடித்து வந்த சாலையில் தேங்கிக் கிடக்கிறது.

தற்போது வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த சிறிய பாறைகளையும், மண்ணையும் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த பணிகளை பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது ஒகேனக்கல் கணவாய் மலைப்பகுதியில் விழும் நிலையில் இருந்த ராட்சதப் பாறையை உடனடியாக அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை ஊழியா்களுக்கு அவா் உத்தரவிட்டாா். அதன்பேரில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சுமாா் 5 டன் எடையுள்ள அந்த ராட்சதப் பாறையை சிறு, சிறு கற்களாக உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT