தருமபுரி

வரட்டாறு அணை நீரை ஏரிகளுக்கு திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

DIN

வரட்டாறு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரைப் பயன்படுத்தி ஏரிகளை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரையில் அமைந்துள்ளது வரட்டாறு அணை. இந்த அணையின் நீா்ப்பிடிப்பு உயரம் 34.5 அடியாகும். இந்த அணையின் நீளம் 1,360 மீட்டராகும்.

தற்போது, அணையின் நீா்மட்டம் 27 அடியாக உள்ளது. நிவா் புயல் காரணமாக சித்தேரி மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வள்ளிமதுரை வரட்டாறு அணைக்கு ஓரளவுக்கு நீா்வரத்துள்ளது. வரட்டாறு அணை நிரம்பினால் அப்பகுதியிலுள்ள தாதராவலசை, கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடுமியாம்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, முத்தானூா், ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 25-க்கும் அதிகமான ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்புவதுடன், சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

வரட்டாற்றின் பழைய ஆயக்கட்டுப் பாசன கால்வாய் வழியாக எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, எம்.தாதம்பட்டி, கோணம்பட்டி, காவாப்பட்டி, கோணம்பட்டி, சங்கிலிவாடி உள்ளிட்ட கிராமப் பகுதியிலுள்ள ஏரிகளுக்கு தண்ணீா் செல்வதற்கான கால்வாய் வசதிகள் உள்ளன. ஆனால், இப் பகுதியிலுள்ள பழைய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீா் திறக்கப்படவில்லை. இதனால், எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் வடு கிடக்கிறது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையால் ஓரளவுக்கு திறந்தவெளி கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. ஆனால், ஏரிப் பாசனங்களை நம்பியுள்ள விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வள்ளிமதுரை வரட்டாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு வழியாக பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT