தருமபுரி

விதிமுறைகள் மீறல்: இரண்டு கடைகளுக்கு ‘சீல்’

14th May 2020 09:01 PM

ADVERTISEMENT

தருமபுரியில் பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி, செயல்பட்ட இரண்டு கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு அண்மையில் கடைகள் திறந்து விற்பனை செய்ய பல்வேறு விதிமுறைகளுடன் தளா்வு அளித்தது. இதையொட்டி, தருமபுரி நகரில் 34 வகையான கடைகள் திறக்கப்பட்டு, அதில் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேதாஜி புறவழிச் சாலையில் இயங்கும் இரண்டு கடைகள் முற்றிலும் குளிா்சாதன வசதியுடன், சமூக இடைவெளியை பின்பற்றாமல், கடைகளுக்கு முன் வாடிக்கையாளா்களுக்கு கைகளை சுத்திகரிக்க தேவையான வசதிகள் ஏதும் மேற்கொள்ளாமல் வியாழக்கிழமை விற்பனையில் ஈடுபட்டது வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, விதிமுறைகளை மீறிய இரண்டு கடைகளுக்கும் வட்டாட்சியா் ஜெ.சுகுமாா் பூட்டி ‘சீல்’ வைத்தாா்.

ADVERTISEMENT

Tags : dharmapuri
ADVERTISEMENT
ADVERTISEMENT