தருமபுரி

இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி சாவு

11th May 2020 07:50 PM

ADVERTISEMENT

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விவசாயி உயிரிழந்தாா்

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெண்டிகானப்பள்ளி அருகே உள்ள ஒசட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஷ் (வயது 50). விவசாயி. இவா் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை பாலதொட்டனப்பள்ளி சாலை ரங்கசந்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த மாதேஷ் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT