தருமபுரி

ஒகேனக்கல்லில் மூன்று கடைகள் தீயில் எரிந்து சேதம்

9th May 2020 08:49 PM

ADVERTISEMENT

ஒகேனக்கல் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகளில் இருந்த பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன.

ஒகேனக்கல் பேருந்து நிலையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இக் கடைகள் பொதுமுடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் சனிக்கிழமை இக் கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

எனினும், விபத்தில் கூத்தபாடியைச் சோ்ந்த எல்லப்பன்,செல்வராஜ் மற்றும் ஊட்டமலை பகுதியை சோ்ந்த முருகேசன் ஆகியோரது கடைகளில் இருந்த பொருள்கள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT