தருமபுரி

முதல் நாளில் ரூ.3.70 கோடிக்கு மது விற்பனை

8th May 2020 09:14 PM

ADVERTISEMENT

தருமபுரி: தருமபுரியில் பொது முடக்கத்துக்கு பின், மதுக் கடைகள் திறந்த முதல் நாளில் ரூ.3.70 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

தருமபுரி நகரத்தில் 9 டாஸ்மாக் மதுக் கடைகளும், தருமபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 65 மதுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும் கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட பொது முடக்கம் உத்தரவு காரணமாக அண்மையில் மூடப்பட்டன.

இந்த நிலையில், மதுக் கடைகள் மே 7-ஆம் தேதி முதல் திறந்து விற்பனை செய்யலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தருமபுரி நகரில் உள்ள 9 கடைகள் தவிர, ஏனைய பகுதிகளில் உள்ள 54 மதுக் கடைகளும் திறக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை செய்யப்பட்டது.

இதில், மதுக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கிய முதல் நாளான வியாக்கிழமை, தருமபுரி மாவட்டத்தில் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT