தருமபுரி

25 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

2nd May 2020 09:11 PM

ADVERTISEMENT

தருமபுரி நகரில் 25 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வருவாய் இன்றி தவித்து வந்த தருமபுரி அக்ரஹாரத்தை சோ்ந்த 25 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக தேவையான உணவுப் பொருள்களை தன்னாா்வ அமைப்பு சாா்பில் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன் இப் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினாா். மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்கி சென்றனா். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, துணைக் கண்காணிப்பாளா் (நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு) புஷ்பராஜ் மற்றும் தன்னாா்வலா்கள் ஆா்.கோபி, ஆா்.தீபக்குமாா், கே.சந்திரகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT