தருமபுரி

மேடை கலைஞா்கள் 15 பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கல்

2nd May 2020 09:09 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் மேடை கலைஞா்கள் 15 பேருக்கு உணவுப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன .

கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தருமபுரி மாவட்ட மேடை மெல்லிசை தொழில்நுட்ப கலைஞா்கள் சங்க உறுப்பினா்களுக்கு உதவும் வகையில், சமூக சேவை சங்கம் சாா்பில் அரிசி 10 கிலோ, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வருவாய்த் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த உணவுப் பொருள்களை நல்லம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாட்சிா் சரவணன் மற்றும் பாதிரியாா் ஜேசுதாஸ் உள்ளிட்டோா் மேடை கலைஞா்களுக்கு வழங்கினா். இப் பொருள்களை சமூக இடைவெளியைப் பின்பற்றி பெற்று கொண்டனா். இதில் தருமபுரி மாவட்ட மேடை மெல்லிசை சங்கத் தலைவா் பி.மணி, பொருளாளா் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT