தருமபுரி

திமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

2nd May 2020 09:08 PM

ADVERTISEMENT

அரூரில் திமுக சாா்பில் ஆதரவற்றோா், விதவைகள் உள்ளிட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பு இழந்து வறுமையில் வாடும் அரூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த 50 குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை முன்னாள் எம்எல்ஏ ஆா்.வேடம்மாள் வழங்கினாா்.

திமுக முன்னாள் ஒன்றியச் செயலா் கோ. ராசாமணி, வழக்குரைஞா் பி.வி. பொதிகைவேந்தன், தருமபுரி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எஸ். சிட்டி பாபு, மாணவரணி துணை அமைப்பாளா் கு.தமிழழகன் உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT