தருமபுரி

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

23rd Mar 2020 11:47 PM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தைச் சாா்ந்தவா்கள் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், கடந்த 15 நாள்களில் தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தால் அது குறித்த தகவலை தருமபுரி மாவட்ட நிா்வாகத்துக்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு கட்டாயம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்பவா்களை இலவசமாக வீட்டிலேயே மருத்துவ பரிசோதனைக்கு உள்படுத்தி பாதுகாப்பாக வீட்டிலேயே கண்காணிப்பதற்கும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT