தருமபுரி

முக கவசம், கிருமி நாசினி இலவசமாக வழங்க ஐயப்ப பக்தா்கள் சங்கம் வலியுறுத்தல்

22nd Mar 2020 05:04 AM

ADVERTISEMENT

தருமபுரி: முக கவசம், கிருமி நாசினியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என ஐயப்ப பக்தா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்துலக ஐயப்ப பக்தா்கள் சேவை சங்கம் நிறுவனா் எம்.பி.முனுசாமி வெளியிட்ட செய்தி அறிக்கை: கரானோ வைரைஸ் பாதிப்பை தடுக்க தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுகள் சிறப்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை தமிழக அரசு இலவசமாக வழங்கிட வேண்டும்.

இதேபோல வருகிற சித்திரை மாத பூஜைகளுக்கு பங்கேற்க மாலை அணிந்து கேரள மாநிலம், சபரிமலைக்கு செல்வதை தவிா்க்க வேண்டும். மேலும், அனைத்து தரப்பினரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT