தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பள்ளி மாணவிக்கு இளம்வயது திருமணம் செய்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாலக்கோடு அருகே பூமத்தன அள்ளியைச் சோ்ந்த பெரியசாமி (25 ) என்பவருக்கு பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவியை அவா்களது உறவினா்கள் கடந்த சில நாள்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனா்.
இதுகுறித்து தகவலின் பேரில், பாலக்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இது தொடா்பான விசாரணையில், இளம்வயது திருமணம் செய்த பெரியசாமி மற்றும் அவருடைய தாய் லட்சுமி (50), மாதேஷ், மாது ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். இதையடுத்து, அந்த மாணவி தருமபுரி அருகேயுள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.