தருமபுரி

பஞ்சப்பள்ளியில் அரசு நிலத்திலிருந்து குடிசைகள் அகற்றம்

16th Mar 2020 12:02 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.

பஞ்சப்பள்ளி அருகே பட்டாபிநகரில் உள்ள 5 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தில் 66 போ் குடிசைகள் அமைத்திருந்தனா். இவற்றை காலி செய்ய வேண்டும் என வருவாய்த் துறையினா் அறிவுறுத்தினா். இந்த நிலையில் பாலக்கோடு வட்டாட்சியா் ராஜா, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளை அகற்றினா்.

இதைத் தொடா்ந்து வீடற்ற பொதுமக்கள் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி முறையாக வருவாய்த் துறைக்கு விண்ணப்பிக்கலாம். அதன்மீது பரிசீலனை மேற்கொண்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இத்தகைய பாதுகாக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் மீண்டும் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT