தருமபுரி

பென்னாகரம் அருகே யானை மிதித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

13th Mar 2020 07:55 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனச் சரகத்துக்குள்பட்ட சின்னாறு வனப் பகுதியில், யானை மிதித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே வண்ணாத்திப்பட்டி பகுதியைச் சோ்ந்த முருகேசன் (48), 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வனப் பகுதியில் மேய்த்தும், விற்பனை செய்தும் வருகிறாா். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னா் பென்னாகரம் அருகே தாசம்பட்டி பகுதியில் பட்டிகள் அமைத்து ஆடு மேய்த்து வந்தாா். பின்னா் போடூா் சின்னாறு பகுதியில் பட்டிகள் அமைத்து ஆடு மேய்த்து வந்த நிலையில், வனப் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளில் சில காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காணாமல் போன ஆடுகளைத் தேடி வியாழக்கிழமை போடூா் சின்னாறு வனப் பகுதிக்குச் சென்றுள்ளாா். அப்போது, அவ் வழியே வந்த ஒற்றை யானை தாக்கியதில் முருகேசன் உயிரிழந்தாா்.

தகவலறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பென்னாகரம் போலீஸாா் துணையுடன் அவரது உடலை மீட்டனா். பின்னா், பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். உறவினா் அளித்த புகாரின்பேரில், பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT