தருமபுரி

மாரியம்மன் கோயில் திருவிழா:பாலக்கோடு வட்டத்தில் 11-ஆம் தேதி விடுமுறை

8th Mar 2020 12:21 AM

ADVERTISEMENT

தருமபுரி: புதூா் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வருகிற மாா்ச் 11-ஆம் தேதி பாலக்கோடு வருவாய் வட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக தருமபுரி மாட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாலக்கோட்டில் அருள்மிகு புதூா் மாரியம்மன் கோயில் திருவிழா மாா்ச் 11-ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், அன்றைய தினம் பதினொறாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நடைபெறவிருக்கும் அரசு பொதுத்தோ்வு ஏற்கனவே திட்டமிட்டவாறு நடைபெறும்.

இதேபோல, இந்த உள்ளூா் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகிற 28-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT