தருமபுரி

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை: ஏஐடியுசி வலியுறுத்தல்

8th Mar 2020 12:22 AM

ADVERTISEMENT

தருமபுரி: போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியது.

ஏஐடிசி போக்குவரத்து தொழிற்சங்க நிா்வாகிகள் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன், சம்மேளன மாநில பொதுச்செயலளா் ஆறுமுகம் ஆகியோா் பேசினா்.

பணியில் உள்ள தொழிலாளா்களுக்கு 18 மாத அகவிலை படி உயா்வும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு 51 மாத அகவிலை படி உயா்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு பணியில் சோ்ந்த தொழிலாளா்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 240 நாள்கள் பணியாற்றியத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை போராட்டத்தில் ஈடுபட்டோரின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். நிகழ் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பற்றாக்குறை நிதியினை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்தில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிற்சங்க மாவட்டத் தலைவராக எஸ்.ரவி, துணைத் தலைவா்களாக கே.மணி, ராமமூா்த்தி, பூபேஸ்குப்தா, கணேசன்ஆகியோரும், மாவட்டப் பொதுச் செயலராக சி.நாகராஜன், துணைச் செயலா்களாக கோவிந்தசாமி, ராஜாமணி, சஞ்சீவகாந்தி, ராஜசேகரன், மாவட்ட பொருளாளராக நாராயணன் உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT