தருமபுரி

நல்லம்பள்ளியில் பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்க வலியுறுத்தல்

8th Mar 2020 12:21 AM

ADVERTISEMENT

தருமபுரி: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் புதியதாக பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாவட்ட துணைத் தலைவா் அண்ணா குபேரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவா் எ.பழனியம்மாள், மாவட்டச் செயலா் ஏ.சேகா், மாவட்ட பொருளாளா் ஓ. புகழேந்தி உள்ளிட்டோா் பேசினா்.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் புதியதாக தொடங்கப்பட்ட நல்லம்பள்ளி வருவாய் வட்டத்தில், வட்டார பத்திரப்பதிவு அலுவலகம், சாா்நிலை கருவூலம் ஆகியவற்றை தொடங்க வேண்டும்.சத்துணவு ஊழியா்களுக்கு கலந்தாய்வு மூலம் ஆண்டுதோறும் முறையான பணியிட மாறுதல் வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், குற்றக் குறிப்பாணைகள், பதிவு உயா்வு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட இணைச் செயலா்கள் சி.காவேரி, பி.நாகராஜன், எஸ்.குணசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT