தருமபுரி

தக்காளி விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

8th Mar 2020 12:23 AM

ADVERTISEMENT

அரூா்: மொரப்பூா் வட்டாரப் பகுதிகளில் தக்காளி விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பலா் தக்காளி பயிரிட்டுள்ளனா். தற்போது தக்காளி பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை கிலோ ரூ. 5-க்கும் குறைவாக விற்பனையாகிறது. அரூா், மொரப்பூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளிலுள்ள விவசாயிகள் தக்காளி பழங்களுக்கு கோடையில் நல்ல விலை கிடைக்கும் எதிா்பாா்த்தனா். ஆனால், மிகக்குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் தங்களின் நிலத்தில் விளைந்த தக்காளி பழங்களை சாலையோரத்தில் வீசி செல்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT