தருமபுரி

தகுதிச் சான்று இல்லாத 5 வாகனங்கள் பறிமுதல்

8th Mar 2020 12:22 AM

ADVERTISEMENT

அரூா்: அரூரில் தகுதிச் சான்றுகள் இல்லாமல் இயக்கப்பட்ட 5 வாகனங்களை போக்குவரத்து துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

அரூா் வட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் மினி சரக்கு வாகனங்கள் தகுதி சான்றுகள் இல்லாமலும், அதில் பயணிகளை அழைத்துச் செல்வதாக புகாா் எழுந்தது. இதையடுத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம் தலைமையிலான போக்குவரத்து துறையினா், அரூா்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனங்களில் தகுதிச் சான்று, ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT