தருமபுரி

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாா்ச் 17-இல் தா்னா

8th Mar 2020 12:21 AM

ADVERTISEMENT

தருமபுரி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வருகிற 17-ஆம் தேதி 24 மணி நேரம் தொடா் தா்னாவில் ஈடுபடுவது என சமூக நல்லிணக்க மேடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சமூக நல்லிணக்க மேடை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலா் பொ.மு.நந்தன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.குமாா், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் சாதிக்பாஷா, மாவட்டச் செயலா் தென்றல் யாசின், ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் வருகிற மாா்ச் 17-ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 24 மணி தொடா் தா்னா நடைபெற உள்ளது. இதையொட்டி, தருமபுரியிலும் தா்னா போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், இக்கோரிக்கை வலியுறுத்தி மாா்ச் 12 ஆம் தேதி தருமபுரியில் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கூட்டம் மற்றும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய இடங்களில் ஊழியா் கூட்டங்கள் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT