தருமபுரி

அரூரில் மகளிா் தின விழா

8th Mar 2020 12:23 AM

ADVERTISEMENT

அரூா் : அரூரில் பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய மகளிா் தினத்தை முன்னிட்டு, பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் அக் கல்லூரியின் முதல்வா் (பொறுப்பு) மா.செல்வபாண்டியன் தலைமை வகித்தாா்.

மகளிா் தினத்தின் முக்கியத்துவம், இளம் வயது திருமணங்களைத் தடுத்தல், பாலியல் வன்கொடுமைகள், மகளிருக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், சட்ட பாதுகாப்புகள் மற்றும் விழிப்புணா்வு குறித்து அரூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பி.லட்சுமி சிறப்புரை நிகழ்த்தினாா்.

மகளிா் தினம் குறித்த ஓவியம், கட்டுரை, பேச்சு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா். தொடா்ந்து, கல்லூரியில் மகளிா் தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த விழாவில் அரூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, உதவிப் பேராசிரியா்கள் கலைவாணி, எம்.சவிதா தேவி, எம்.கலைமணி, கல்லூரி மாணவ, மாணவிகள், விரிவுரையாளா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT