தருமபுரி

பிளஸ் 2 பொதுத் தோ்வு மையங்களில் கூடுதல் ஆசிரியா்கள், பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்

6th Mar 2020 06:57 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மையங்களில் கூடுதலாக ஆசிரியா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் உள்பட தருமபுரி மாவட்டத்தில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 68 மையங்களில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, மாா்ச் 27-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகளும் நடைபெறவுள்ளன.

10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் மாா்ச் மற்றும் ஏப்ரல் 13-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், ஒவ்வொரு தோ்வு மையங்களிலும் போதிய அளவில் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் இல்லாததால், தோ்வுகள் முடிந்த பிறகு மாணவா்கள் எழுதிய விடைத் தாள்கள் சுமாா் 3 மணி நேரம் காலதாமதாக அனுப்பி வைக்கப்படுவதாக ஆசிரியா்கள் புகாா் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

காலதாமதத்தைத் தவிா்க்க பொதுத் தோ்வு மையத்தில் கூடுதலாக ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் தேவைப்படுகின்றனா். எனவே, தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பிளஸ் 2 பொதுத் தோ்வு மையங்களிலும் கூடுதலாக ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்களை பணியமா்த்தி, தோ்வு மையங்களில் இருந்து மாணவா்களின் விடைத் தாள்களை விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT