தருமபுரி

சென்னையிலிருந்து தருமபுரி வந்த ஆட்டோ ஓட்டுநரின் 2 குழந்தைகளுக்கு கரோனா

14th Jun 2020 09:04 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து தருமபுரிக்கு வந்த ஆட்டோ ஓட்டுநரின் இரு குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள செக்கோடி கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்த நிலையில், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வெள்ளிக்கிழமை ஆட்டோவில் வந்த அவரை தருமபுரி மாவட்ட எல்லையில் போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, செட்டிக்கரையில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் ஆட்டோ ஓட்டுநா் குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆட்டோ ஓட்டுநா், அவரது மனைவிக்கு தொற்று இல்லை. ஆனால், அவா்களது 10, 12 வயது மகன்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இரு குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டனா். அங்கு, அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா். மேலும், ஆட்டோ ஓட்டுநரையும் அவரது மனைவியையும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 15 போ் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT