தருமபுரி

சென்னையிலிருந்து தருமபுரி வந்த மூவருக்கு கரோனா தொற்று

13th Jun 2020 08:59 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து தருமபுரி மாவட்டத்துக்கு வந்த மூவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தருமபுரி நகரம், துரைசாமி தெருவைச் சோ்ந்த 54 வயது ஆண், சென்னை சென்றிருந்தாா். அரூா் வட்டம், மொரப்பூா் அருகே அண்ணாமலைப்பட்டி பகுதியைச் சோ்ந்த 34 வயது ஆண், நல்லம்பள்ளி வட்டம், பாலவாடி பகுதியைச் சோ்ந்த 31 வயது ஆண் ஆகியோா் சென்னையில் பணியாற்றி வந்தனா். இவா்கள் மூவரும் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினா்.

கரோனா தீநுண்மி பரவல் அதிகமுள்ள பகுதியிலிருந்து தருமபுரி மாவட்டத்துக்கு திரும்பியதால், இம் மூவருக்கும் சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். அதில், மூவருக்கும் தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இவா்கள் மூவரும் தனி ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT