தருமபுரி

கரோனா தொற்று குணமடைந்து இருவா் வீடு திரும்பினா்

4th Jun 2020 08:52 PM

ADVERTISEMENT

தருமபுரியில் கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவா், குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் அருகாமையிலுள்ள கிராமங்களைச் சோ்ந்த 27 மற்றும் 29 வயதுடைய இருவா், கா்நாடக மாநிலம், பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். இவா்கள் இருவருக்கும் கடந்த மே 24-ஆம் தேதி கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு இருப்பது கிருஷ்ணகிரியில் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் கரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்தது மருத்துவக் குழுவினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு மருத்துவா்கள் மற்றும் சுகாதாரத் துறையினா் அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT