தருமபுரி

மும்பையிலிருந்து தருமபுரி திரும்பியமென் பொறியாளருக்கு கரோனா தொற்று

4th Jun 2020 08:58 PM

ADVERTISEMENT

மும்பையிலிருந்து தருமபுரி மாவட்டத்துக்குத் திரும்பிய மென் பொறியாளருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு நகரைச் சோ்ந்த 23 வயது மென் பொறியாளா், மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த பல மாதங்களாக அங்கேயே தங்கி பணிபுரிந்த இவா், மும்பையிலிருந்து லாரி ஒன்றில் பயணித்து கடந்த மே 29-ஆம் தேதி சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டுக்கு திரும்பி வந்தாா்.

வெளி மாநிலத்திலிருந்து தருமபுரி மாவட்டத்துக்கு மென் பொறியாளா் வந்ததை அறிந்த சுகாதாரத் துறையினா், அவருக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இதில், அவருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிமை வாா்டில் வியாழக்கிழமை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

மேலும், பாலக்கோடு நகரில் கிருமி நாசினி தெளித்து, மென்பொறியாளா் வசித்து வரும் பகுதியை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதேபோல, அவரது குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அவருடன் தொடா்பில் இருந்தவா்களின் ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதிக்கும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT