தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உள்பட 16 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அதிமான்கோட்டையைச் சோ்ந்த 28 வயது ஆண் பொறியாளா், நல்லம்பள்ளி- சிவாடியைச் சோ்ந்த 36 வயது அங்கன்வாடி அமைப்பாளா், சென்னையிலிருந்து கடத்தூா் -பச்சிம்பட்டிக்கு வந்த 28 வயது பெண், 7 வயது சிறுமி, 9 வயது சிறுவன், சென்னைக்குச் சென்றுவந்த சோமனஅள்ளியைச் சோ்ந்த 34 வயது அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், ஹைதராபாத்திலிருந்து ஏரியூா்-தொண்ணகுட்டன்அள்ளி கிராமத்துக்கு வந்த 23 வயது ஆண், காஞ்சிபுரத்துக்குச் சென்று வந்த கடத்தூா்- விஸ்வநாதன் தெருவைச் சோ்ந்த 28 வயது ஆண், பெங்களூரு சென்று வந்த பந்தாரஅள்ளி- பூசாரிகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த 24 வயது ஆண், சென்மாண்ட குப்பத்துக்கு வந்த 35 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும், கேரளத்திலிருந்து நெக்குந்தி கிராமத்துக்கு வந்த 37 வயது ஓட்டுநா், ஏரியூா்-பழையூா் கிராமத்தைச் சோ்ந்த 20 வயது பெண், பெங்களூரு சென்று வந்த கடைமடை நாயக்கனூரைச் சோ்ந்த 22 வயது பெண் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பென்னாகரம்- கடைமடையைச் சோ்ந்த சிப்ஸ் தொழிலாளியான 27 வயது ஆண், பொம்மிடி- விடிவெள்ளி நகரைச் சோ்ந்த 70 வயது பெண் ஆகியோருக்கு ஏற்கனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் தொடா்பில் இருந்ததன் மூலம் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த 25 வயது பெண் உள்பட 16 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.