பென்னாகரம்: பென்னாகரம் அருகே பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காவலா்கள், வருவாய்த் துறையினருக்கு கரோனா தொற்று பரிசோதனை திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் அரசு அலுவலா்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா் .இதனைத் தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில் பென்னாகரம் பகுதியில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காவலா்கள், வருவாய்த் துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறையினா் கரோனா தீதுண்மி தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டனா்.
இதில் ஏராளமானோா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பரிசோதனை செய்து கொண்டனா்.