தருமபுரி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்

28th Jan 2020 12:04 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நிா்வாகக்குழு உறுப்பினா் சி.மாதையன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாவட்டச் செயலா் எஸ்.தேவராஜன் ஆகியோா் பேசினா்.

இக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு முறையைக் கைவிட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கு ஒகேனக்கல் குடிநீா் முறையாக தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலா் கா.சி.தமிழ்க்குமரன், செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.சின்னசாமி, எம்.மாதேஸ்வரன், கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT