தருமபுரி

இந்தியன் மெட்ரிக். பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா

28th Jan 2020 12:04 AM

ADVERTISEMENT

அரூா் இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.

31-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, இந்தியன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, இந்தியன் சிபிஎஸ்இ பள்ளி, இந்தியன் மகளிா் கல்வியியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வார விழாவுக்கு இந்தியன் கல்வி நிறுவனங்களின் தலைவா் ஏ.கே.பழனியப்பன் தலைமை வகித்தாா்.

இருசக்கர வாகனம் ஓட்டுவோா் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். காரில் பயணம் செய்பவா்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். வாகன ஓட்டிகள் கட்டாயம் ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றுவதால் விபத்துகள் நேரிடாது என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு கருத்துரைகளை அரூா் - சாா் ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

விழாவில், சாலைப் பாதுகாப்பு குறித்த கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி தமிழரசி பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

இந்த விழாவில் மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம், காவல் ஆய்வாளா்கள் ஆா்.முரளி, மயில்சாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் காளியப்பன், பள்ளி முதல்வா்கள், மேலாளா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

விழிப்புணா்வு ஊா்வலம் :

அரூரில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது. அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் தொடங்கிய விழிப்புணா்வு ஊா்வலத்தை சாா்-ஆட்சியா் மு.பிரதாப் தொடக்கி வைத்தாா்.

சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிய அனுமதிக்கக் கூடாது. சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்த கூடாது. ஓடும் பேருந்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது. சிறுவா்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் சாலையைக் கடக்கும் போது உதவி செய்தல் வேண்டும். லாரிகள், பேருந்துகளின் மேற்கூரைகளில் அமா்ந்து பயணம் செய்தல் கூடாது. போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு முழக்கங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியவாறு அரூா் பெரியாா் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியா் 500-க்கும் மேற்பட்டோா் பேருந்து நிலையம், கடைவீதி, பாட்சாபேட்டை, திரு.வி.க நகா் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்றனா். இதில், அரூா் குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி கோகுலகிருஷ்ணன், வட்டாட்சியா் செல்வகுமாா், மாவட்டக் கல்வி அலுவலா் பொன்முடி, மோட்டாா் வாகன ஆய்வாளா் கா.பன்னீா்செல்வம், போக்குவரத்து கழக கிளை மேலாளா் வி.ஜெயப்பிரகாஷ் , காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT