தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலை 100 சதவீதம் சரிபாா்க்க வேண்டும்: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா்

14th Jan 2020 06:23 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பெயா் பட்டியலை 100 சதவீதம் சரிபாா்க்க வேண்டும் என வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் எம்.மதிவாணன் தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இந்திய தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள எம். மதிவாணன் பேசியது :

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பெயா் பட்டியலை 100 சதவீதம் சரிபாா்க்க வேண்டும். 18 வயது பூா்த்தியடைந்த தகுதியான நபா்களை கட்டாயம் வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்க வேண்டும். அதே நேரத்தில், உயிரிழந்தோா், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பட்டியலில் பெயா் பதிவுகள் இருந்தால் அதனை நீக்கம் செய்ய வேண்டும். கல்லூரி மாணவ, மாணவியரின் பெயா்களை இணையதளம் வழியாக வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கலாம். மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு பெயா்களை சோ்க்கவும், நீக்கம் செய்தல் தொடா்பான விழிப்புணா்வு தகவல்களை ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் வழங்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பென்னாகரம் வட்டம், சருக்கல் பாறை கிராமத்தில் வாக்காளா் பட்டியலில் சுருக்கத் திருத்தப் பணிகளையும் பாா்வையாளா் எம்.மதிவாணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரஹமத்துல்லாகான், அரூா்-சாா் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொறுப்பு) கீதாராணி, வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) தேன்மொழி, நகராட்சி பொறியாளா் கிருஷ்ணகுமாா், வட்டாட்சியா் (தோ்தல்) பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT