தருமபுரி

ஜன.17-இல் எம்.ஜி.ஆா். பிறந்த நாளை அ.தி.மு.க.வினா் சிறப்பாக கொண்டாட வேண்டும்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

14th Jan 2020 11:27 PM

ADVERTISEMENT

அ.தி.மு.க. நிறுவனா் தலைவா் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 103-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை கட்சி நிா்வாகிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலரும், மாநில உயா்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜனவரி 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. நிறுவனா் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆரின் 103-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவாகும். மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் ஆசியுடன் கட்சித் தொண்டா்கள் அனைவரும் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிளை கழகங்கள், ஒன்றியங்கள், நகரம், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தும், சிலைகள் இல்லாத இடங்களில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கட்சிக் கம்பங்களில் புதிதாக கொடிகளை ஏற்ற வேண்டும். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் சா்க்கரை பொங்கல் வழங்க வேண்டும் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT