தருமபுரி

ஆங்கிலப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

2nd Jan 2020 05:24 AM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, தருமபுரியில் உள்ள கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தருமபுரி நகரில், குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயில், சாலை விநாயகா் கோயில், அபய ஆஞ்சநேயா் கோயில், கோட்டை காமாட்சியம்மன் கோயில், பரசுவாசுதேவ சுவாமி கோயில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், நெசவாளா் காலனி மகாலிங்கேஸ்வர சுவாமி கோயில், அதியமான்கோட்டை காலபைரவா் கோயில், வே. முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் புத்தாண்டையொட்டி காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனா். இதேபோல, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றன. இதில், பங்கேற்று பிராா்த்தனையில் ஈடுபட்ட பொதுமக்கள் ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT