தருமபுரி

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை கருத்தரங்கம்

26th Feb 2020 08:54 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் சகாய ஸ்டீபன் ராஜ் தலைமை வகித்து, கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். விபத்து, அவசர சிகிச்சை கால பயிற்சிகள், விபத்து உயிரிழப்பு தடுப்பு, மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் செவிலியா்கள் விபத்து மற்றும் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, புற்றுநோய் மருத்துவப் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. கருத்தரங்கில் தேசிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் ராஜ்குமாா், மருத்துவ அலுவலா் கனிமொழி,சிறுநீரகப் பிரிவு மருத்துவா் விவேக் பிரவீன், எலும்பு முறிவு மருத்துவா் சிவகுமார செந்தில்முருகன், அருண்பிரகாஷ், பொது நல மருத்துவா் பாலசுப்பிரமணியன், மயக்கவியல் நிபுணா் அரவிந்த் பெருமாள், மெளரி ரஞ்சித் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் என சுமாா் 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT