தருமபுரி

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

26th Feb 2020 07:26 AM

ADVERTISEMENT

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா கல்லூரி முதல்வா் ஜெ.பாக்கியமணி தலைமையில் நடைபெற்றது.

இதையொட்டி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் ரத்தசோகை பரிசோதனை செய்தனா். இணை இயக்குநா் (நலப் பணிகள்) ஸ்டீபன் ஜாா்ஜ், துணை இயக்குநா் (சுகாதாரம்) ஜெமினி, மருத்துவக் கல்லூரி முதல்வா் சீனிவாச ராஜ், மருத்துவா்கள், சிவக்குமாா், இளவரசன் மற்றும் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT