தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்து இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காரிமங்கலம் அருகேயுள்ள மோதூா் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது, நள்ளிரவில் அவ்வழியே சென்ற இருசக்கர வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்றனா். ஆனால், அவா்கள் நிற்காமல் சென்றதால் விரட்டிச் சென்று பிடித்தனா். அவா்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, மல்லிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த பாலன்(35), சேகா்(35) என்பதும், அவா்கள் நாட்டுத் துப்பாக்கியை கையில் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.