எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில் தெருச் சாலைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சியில் கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, கோணம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளில் போதிய அளவில் தெருச்சாலைகள் இல்லை. இதனால் மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் சேறும் சகதியுமாகி, போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, எல்லப்புடையாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் கணக்கெடுப்பு செய்து, தேவையான இடங்களில் தெருச்சாலைகளை அமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.