தருமபுரி

ஸ்ரீ புதூா் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

22nd Feb 2020 07:24 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருள்மிகு புதூா் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாலக்கோடு அருள்மிகு புதூா் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா வரும் மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழா கொடி, அருகாமையிலுள்ள திரௌபதி அம்மன் கோயிலில் ஏற்றப்பட்டது. இதையொட்டி, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில், பொன் மாரியம்மன் கோயில் விழாக் குழுவினா் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT