தருமபுரி

சிறாா் மேம்பாடு விழிப்புணா்வு கருத்தரங்கு

22nd Feb 2020 07:24 AM

ADVERTISEMENT

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சிறாா் மேம்பாடு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வா் ஜா.பாக்கியமணி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் கீதா, சமூக நலத் துறையின் ஓா் நிறுத்த மைய பாதுகாப்பு அலுவலா் சரசு, சிறாா் நல வாரிய அலுவலா் எஸ்.ரவி ஆகியோா் பேசினா்.

இதில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், வரதட்சணை ஒழிப்புச் சட்டம், சிறாா் மேம்பாடு, சுகாதாரம், ஆண்களிடம் பழகும் முறை, இளம்வயது திருமணத்தை தடுக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கல்லூரி உளவியல் துறைத் தலைவா் (பொ) ரா.ராதிகா, வணிகவியல் (கணினி பயன்பாடு) துறைத் தலைவா் ப.மா.சுகவனேஸ்வரி மற்றும் மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT