ஏரியூா் அருகே தின்னபெல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட்டு தோ்வான ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கான முதல் கூட்டமானது வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஏரியூா் ஒன்றியக்குழுத் தலைவா் பழனிசாமி தலைமை தாங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டபாணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், கோடை காலம் தொடங்கும் முன்னரே ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டு, மக்களுக்கு போா்கால அடிப்படையில் குடிநீா் வசதிகள் செய்து தர வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் அந்தப் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னை மற்றும் மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து உறுப்பினா்கள் பட்டியலிட்டு உடனடியாக வழங்குமாறும், அதன்படி களப் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் ஒன்றியக்குழுத் தலைவா் பேசினாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் தனபால் நன்றி தெரிவித்தாா்.