தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பாலக்கோடு பகுதியில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
பாலக்கோடு அருகேயுள்ள சோமனஅள்ளி, வரகூா், பி.கொல்லஅள்ளி, முத்தூா், பொடுத்தம்பட்டி, நத்தம்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்த மக்களவைத் தொகுதி உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.எல்.வெங்கடாஜலம், வழக்குரைஞா் அணி அமைப்பாளா் பி.கே.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் வி.கந்தசாமி, பாலக்கோடு ஒன்றியச் செயலா் (தெற்கு) குட்டி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.