அரூரில் பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரூா் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில், பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் எம்.செல்வபாண்டியன் தலைமை வகித்தாா்.
பாலியல் வன்கொடுமைகள், மகளிா் மீது திராவக வீச்சு, போதைப் பொருள் தடுப்பு, இளம் வயது திருமணம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.விஸ்வநாதன், குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிகள் ஆா்.தமிழரசி, என்.கோபாலகிருஷ்ணன், வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக அதிகாரி எம்.விஜயகுமாா் ஆகியோா் விழிப்புணா்வு கருத்துரைகளை வழங்கினா்.
இதில், வழக்குரைஞா்கள் சி.சிற்றரசு, ராமலிங்கம், ரமேஷ்பாபு, கல்லூரி மாணவ, மாணவியா் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.