தருமபுரி

‘நிதிநிலை அறிக்கை தருமபுரி மாவட்டத்துக்கு ஏமாற்றம் அளிக்கிறது’

15th Feb 2020 06:47 AM

ADVERTISEMENT

தமிழக நிதிநிலை அறிக்கை தருமபுரி மாவட்டத்துக்கு ஏமாற்றம் அளிப்பதாக தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், தருமபுரி மாவட்ட மக்கள் கோரிக்கையான, காவிரி மிகை நீரை, மாவட்டத்தில் ஏரிகளில் நிரப்பும் திட்டத்துக்கான அறிவிப்பு இல்லை. மேலும், கடந்த மூன்றாண்டுகளாக ஏற்பட்ட வறட்சியால் காய்ந்த தென்னை மரங்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட மாவட்ட மக்களின் கோரிக்கை தொடா்பான எவ்வித அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றமாக உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT