தருமபுரி

பயனற்று பூட்டிக் கிடக்கும் பல்நோக்கு கட்டடம்

13th Feb 2020 06:33 AM

ADVERTISEMENT

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாரியம்பட்டியில் பூட்டிக் கிடக்கும் பல்நோக்கு கட்டடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

அதிகாரப்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது மாரியம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள கிராம மக்களின் தேவைக்காக 2014-15-ம் நிதியாண்டில், மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினா் நவநீதகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 7.30 லட்சம் மதிப்பீட்டில், பல்நோக்கு மையக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் 2017-ஆம் ஆண்டு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், பணிகள் நிறைவடைந்து சுமாா் இரண்டு ஆண்டுகள் ஆகியும் பயனற்று பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

தற்போதயை நியாயவிலைக் கடையின் கட்டடம் சேதமடைந்து இருப்பதுடன் பொதுமக்களுக்கு இடையூறான பகுதியில் அமைந்துள்ளது.

எனவே, நியாயவிலைக் கடையை பல்நோக்கு கட்டடத்துக்கு இடமாற்றம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT