தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.7) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் வருகிற பிப். 7-ஆம் தேதி தனியாா்துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, விற்பனையாளா், விற்பனை பிரதிநிதி, மேற்பாா்வையாளா், கணக்கா், காசாளா், பழுது நீக்குநா் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான பணிகளுக்கு பட்டம், பட்டயம், பள்ளிக் கல்வி முடித்த தகுதியான நபா்கள் தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் தனியாா்த் துறை பணி பெறுவோருக்கு வேலைவாய்ப்புப் பதிவு நீக்கப்படாது. இது இலவச சேவையாகும்.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் அன்றைய தினம் காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.