தருமபுரி

சாலையோரம் கேட்பாரற்று கிடந்த காா்: போலீஸாா் விசாரணை

6th Feb 2020 07:30 AM

ADVERTISEMENT

தருமபுரி அருகே சாலையோரத்தில் கேட்பாரற்ற கிடந்த காா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி அருகே அதியமான்கோட்டை- ஒசூா் நெடுஞ்சாலையில் சோகத்தூா் ஏரிக்கரை அருகே பள்ளத்தில் காா் ஒன்று கேட்பாரற்று விழுந்து கிடந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், புதன்கிழமை நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், நகர காவல் ஆய்வாளா் ரத்தினகுமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று காரை மீட்டனா். மேலும், காரின் உள்ளே யாரும் இல்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காரின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளா் மற்றும் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT